லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சோனியா காந்தி இரங்கல்!

லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

Update: 2022-02-06 09:11 GMT
மும்பை,

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி இன்று காலை தனது 92-ஆவது வயதில் காலமானார்.  

இதையடுத்து அவருக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறும்போது, 

“ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

லதா மங்கேஷ்கரின் மனதை தொடும் குரல் மற்றும் தேசப்பற்றை வலியுறுத்தும் பாடல்கள், அவருடைய கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை வருங்கால தலைமுறைக்கு உத்வேகமாக இருக்கும்.

அவருடைய கடைசி யாத்திரைக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறேன்; இதயம் கனிந்த இரங்கல்கள்.”  

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்