2 ஆண்டுகளாக இளம் பெண்ணை சிறைவைத்து பாலியல் வன்கொடுமை
கடந்த 2 ஆண்டுகளாக இளம்பெண்னை தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த அப்பெண்ணின் நண்பர் கைது செய்யப்பட்டார்.
பெங்களுரு,
பெங்களூரு கங்கமனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 27 வயது இளம்பெண் கணவரை பிரிந்த நிலையில் தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபருடன் பழக்கம் உண்டானது. இதனால் அப்பெண் அவருடன் நண்பராக பழகி வந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை, அவரது நண்பர் எசருகட்டாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது அங்கு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த இளம்பெண்ணை தனது வீட்டிலேயே சிறை வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பர் விடுவித்து இருந்தார். விடுவித்த பின்பும் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட அவரது நண்பர் எனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கி உள்ளேன். அந்த கடனை என்னால் அடைக்க முடியவில்லை. இதனால் அவர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் போில் கங்கமனகுடி போலீசார் இளம்பெண்ணின் நண்பர், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.