ஜம்மு காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தானை எல்லையோர மண்டலத்தில் காலை 9.45 மணி அளவில் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தானை எல்லையோரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக காஷ்மீரில் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்த பொருட்கள் குலுங்கின.
காஷ்மீரில் நிகழ்ந்த நிலநடுக்கம் டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.