கவர்னரின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது - திமுக எம்.பி திருச்சி சிவா

கவர்னர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.

Update: 2022-02-04 06:20 GMT
புதுடெல்லி,

நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளிக்காத நிலையில் அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து  டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதாவது:-

நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறிவிட்டது. கவர்னர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றார். 

மேலும் செய்திகள்