மத்திய அரசில் 8.72 லட்சம் காலி பணியிடங்கள் - மாநிலங்களவையில் தகவல்

மத்திய அரசு துறைகளில் 8 லட்சத்து 72 ஆயிரத்து 243 காலி பணியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-04 03:02 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசு பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங், எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:-

“கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி, மத்திய அரசு துறைகளில் 8 லட்சத்து 72 ஆயிரத்து 243 காலி பணியிடங்கள் உள்ளன. மத்திய பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி, ரெயில்வே தேர்வு வாரியம் ஆகியவை கடந்த 2018-19 மற்றும் 2020-2021 நிதியாண்டுகளில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 468 ஊழியர்களை தேர்வு செய்துள்ளன. 

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (யு.பி.எஸ்.சி.) 485 காலி பணியிடங்கள் உள்ளன. காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடர் நடவடிக்கையாக நடந்து வருகிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்