தமிழகத்தில் 229 குழந்தைகள் காப்பகங்களுக்கு ‘வாத்சல்யா’ நிதி - மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் 229 குழந்தைகள் காப்பகங்களுக்கு வாத்சல்யா நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-02 19:20 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு பதிவின்படி தமிழகத்தில் 229 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. 

இந்த காப்பகங்கள் மூலம் கடந்த 2020-2021-ம் ஆண்டில் 13 ஆயிரத்து 819 குழந்தைகள் மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான ‘வாத்சல்யா’ திட்டத்தின் கீழ் பயன் அடைந்து இருப்பதாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி வரை ரூ.24.57 கோடி தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்