சென்னையில் சசிகலாவுடன் விஜயசாந்தி திடீர் சந்திப்பு
சென்னையில் சசிகலாவை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி சந்தித்து பேசினார்.
சென்னை,
நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி, சசிகலாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
இந்த நிலையில் விஜயசாந்தி-சசிகலா சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சசிகலாவிடம் அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை என்றும் நட்புரீதியாக சந்தித்து பேசியதாகவும் விஜயசாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.