சிறுவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துக - மத்திய அரசு
15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜன.,3ம் தேதி துவங்கியது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், '15 - 18 வயதினருக்கான கோவாக்சின் தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் 2-வது டோஸ் போட்டுக்கொள்ளலாம்.
அதன்படி, ஜன.,31 முதல் 2வது டோஸ் செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.