இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.;
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்றைய பாதிப்பான 1 லட்சத்து 67 ஆயிரத்து 59 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 2 லட்சத்து 9 ஆயிரத்து 918- ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 30 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 81ஆயிரத்து 109 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 11 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 21 ஆயிரத்து 603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 733 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 97 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 167 கோடியே 29 லட்சத்து 42 ஆயிரத்து 707 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1,67,29,42,707