ஒமைக்ரான் தடுப்பூசி மருந்து பொருள் உற்பத்தி: புனே சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி
ஒமைக்ரான் தடுப்பூசி மருந்து பொருள் உற்பத்திக்கு புனே சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.;
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதற்கு ஆர்வம் கொண்டுள்ளது.
இந்த நிலையில் அந்த தடுப்பூசியை உருவாக்க பயன்படக்கூடிய ஒரு மருந்துப்பொருளை தயாரித்து, சோதித்து ஆய்வு செய்வதற்கு மத்திய அரசிடம் இந்திய சீரம் நிறுவனம் அனுமதி கோரியது. இந்த அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கி உள்ளது. இந்த தகவலை சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.