மராட்டியத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு...!

மராட்டியத்தில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது.;

Update: 2021-12-31 16:08 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

அதிலும், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 67 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பான 2 ஆயிரத்து 172 மற்றும் நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 368-ஐ விட மிக அதிகமாகும்.

இதனால், மராட்டியத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 78 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 766 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்து 9 ஆயிரத்து 96 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 24 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது

அதேவேளை மராட்டியத்தில் இன்று 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் மொத்த 454 ஆக அதிகரித்துள்ளது.  

மேலும் செய்திகள்