உத்தர பிரதேசம்: புஷ்ப ராஜ் ஜெயின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை

கன்னோஜில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் புஷ்பராஜ் ஜெயின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-31 13:09 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், வாசனைப் பொருட்கள் வியாபாரி  பியூஷ் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட 12 மெகா ரெய்டில் சுமார் 177 கோடி ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 25 கிலோ தங்க நகைகளும் 250 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. 

பியூஷ் ஜெயின்,சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர் என பாஜக விமர்சித்தது. ஆனால் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் புஷ்பராஜ் ஜெயின் என்றும் தவறுதலாக பாஜக ஆதரவாளர் பியஷ் ஜெயினை வருமான வரித்துறை கைது செய்து விட்டதாக அகிலேஷ் கூறியிருந்தார். 

இந்தநிலையில் கன்னோஜில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் புஷ்பராஜ் ஜெயின் உட்பட பல வாசனை திரவிய வியாபாரிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  தற்போது சோதனை நடைபெற்று வரும் புஷ்பராஜ் ஜெயின்  என்பவர் சமாஜ்வாடி ’வாசனை பெர்பியூம்’ என்ற  வாசனை திரவியத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்