அரியானாவில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரான் உறுதி
அரியானாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 37- ஆக உயர்ந்துள்ளது.
சண்டிகர்,
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், அரியானாவில் இன்று ஒரே நாளில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 37- ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 37 பேரில் 12 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாநிலத்தில் ஓமைக்ரான் வழக்குகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, வரும் சனிக்கிழமை முதல் இரவு ஊரடங்கு மற்றும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.