இமாசல பிரதேசம்; பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இமாசல பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-12-28 21:24 GMT


பிலாஸ்பூர்,

இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் நகரில் அமைந்துள்ள பக்ரா சீனியர் செகண்டரி பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் 16 பேரில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை பிலாஸ்பூர் மண்டல மருத்துவமனையின் சுகாதார துறை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார்.  இதனை தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்