கோவாவில் இரவு ஊரடங்கு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - முதல்-மந்திரி பிரமோத் சாவந்த்

கோவாவில் இரவு ஊரடங்கு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-28 18:28 GMT
கோவா,

ஒமைக்ரான் கொரோனா வைரசின் பாதிப்பு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கோவா மாநிலத்தில் நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவர்களில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கூறுகையில்,

மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்.  

இருப்பினும் கிறிஸ்மஸ்-புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சுற்றுலா வணிகம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, கடலோர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. 

சுற்றுலா பயணிகளிடம் கொரோனா விதிமுறைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய சுகாதார துறை மற்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்