கோவாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

கோவாவில் முதன்முறையாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-12-27 19:06 GMT



பனாஜி,


இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில், கோவா சுகாதார மந்திரி விஸ்வஜித் ரானே வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இங்கிலாந்தில் இருந்து கடந்த 17ந்தேதி கோவாவுக்கு வந்த 8 வயது சிறுவனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

அதன் முடிவுகளி வெளிவந்துள்ளன.  இதில், சிறுவனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.  இதனால், கோவாவில் முதன்முறையாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இந்தியாவில், புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்வடைந்து உள்ளது.

மேலும் செய்திகள்