ஒமைக்ரான் அச்சுறுத்தல்; கேரளாவில் இரவு ஊரடங்கு அறிவிப்பு

கேரளாவில் இன்று 1,636- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-12-27 13:33 GMT
திருவனந்தபுரம், 

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் கேரளாவில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் பாதிப்பும் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று 1,636- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,24,929 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46,822- ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் இன்று வெளியிட்டுள்ள புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரைகள், வணிக வளகாங்கள், பார்க்குகள் போன்றவை மாவட்ட மாஜிஸ்திரேட்டு மற்றும் போலீசாரால் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். புத்தாண்டு கொண்டாட மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்