இமாச்சல் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் 2.8 ஆக பதிவு
இமாச்சல பிரதேசம் மண்டி பகுதியில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.;
சிம்லா,
இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 2.8 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இன்று மதியம் 2.16 மணிக்கு ரிக்டர் 3.9 அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.