அசாமில் இரவு நேர ஊரடங்கு அமல்

அசாமில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-12-25 16:55 GMT
கவுகாத்தி,

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.  இதையடுத்து மத்திய பிரதேசம், குஜராத், அரியானா, உத்தரப் பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த மாநிலங்களைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலமான அசாமிலும் நாளை முதல் (26-ம் தேதி) இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.  அதன்படி, இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

அதேசமயம், புத்தாண்டையொட்டி டிசம்பர் 31-ஆம் தேதி இந்த கட்டுப்பாடு பொருந்தாது என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள், ஷோரூம்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இரவு 10.30 மணி வரை மட்டுமே செயல்படலாம்.

திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்