குஜராத்: தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் கைது
குஜராத்தில் தேர்வு வினாத்தாள் வெளியானதால், கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்,
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சவுராஷ்டிரா பல்கலைக்கழகம் உள்ளது. இதன் இறுதியாண்டு பி.காம் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடத்தப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெளியானது.
மேக்ரோ எகனாமிக்ஸ் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதை அடுத்து ராஜ்கோட்டில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அம்ரேலியில் உள்ள சர்தார் படேல் சட்டக் கல்லூரி முதல்வர், அதன் இரண்டு ஊழியர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது வினாத்தாள் வெளியான தேர்வு மட்டும் ஜனாரி 3-ல் நடைபெறும் என்று சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிதின் பெத்தானி கூறினார்.