அயோத்தி நில ஊழல் பற்றிய விசாரணை தொடங்கியது

அயோத்தி நில ஊழல் பற்றிய விசாரணை தொடங்கியுள்ளது.

Update: 2021-12-24 19:27 GMT
லக்னோ, 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்தை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்குள் எஸ்.சி. சமூகத்தினரின் நிலங்களை ஒரு அறக்கட்டளை நிர்வாகம் வாங்கி இருந்தது. ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அந்த அறக்கட்டளையிடம் இருந்து அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், அவர்களின் உறவினர்களும் நிலங்களை அடிமாட்டு வாங்கியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். சிறப்பு செயலாளர் (வருவாய்) ராதேஷ்யாம் மிஸ்ரா, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், மாநில அரசு இந்த விசாரணையை தொடங்கி விட்டதாக கூடுதல் தலைமை செயலாளர் மனோஜ்குமார் சிங் நேற்று தெரிவித்தார். விசாரணை முடிவுகள், முதல்-மந்திரியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்