ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து

ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

Update: 2021-12-24 16:23 GMT
கோப்பு படம்
ஜெய்பூர், 

ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான  போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளனது. சாம் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நேஷனல் பார்க் என்ற இடத்தின் அருகே விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. விமானியின் நிலை குறித்து எதுவும் தகவல் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்