டெல்லியில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 180-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-24 12:40 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை கட்டுக்குள் உள்ளது. தினசரி பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே 10 ஆயிரத்திற்கும் கீழாகவே உள்ளது. இதனால், மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் கடந்த 2 ஆம் தேதி முதன் முதலாக ஊடுருவிய ஒமைக்ரான் தற்போது 17 மாநிலங்களில்  ஊடுருவிட்டது. இந்தியாவில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி 358 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 180-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 6 மாதங்களில் ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். 

டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 782- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.29-சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 62,697- மாதிரிகள், கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்றில் இருந்து மேலும் 82 பேர் குணம் அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்