இந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட சமூக வலைத்தளம், ‘டிக்டாக்’ - ஆய்வு முடிவில் தகவல்

இந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட சமூக வலைத்தளமாக டிக்டாக் உள்ளதாக ஆய்வு முடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-12-23 20:52 GMT
வாஷிங்டன், 

குறுகிய நேர வீடியோக்களை உருவாக்கவும், பதிவேற்றவும், பார்க்கவும் பயன்படும் செல்போன் செயலி, ‘டிக்டாக்’. சீனாவின் ‘பைட் டேன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த செயலி உலகம் முழுவதும் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று உள்ளது. இதனால் இந்த செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இதன் காரணமாக நடப்பு ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட சமூக வலைத்தளமாக டிக்டாக் மாறியிருக்கிறது. அந்தவகையில், கூகுள், பேஸ்புக் போன்ற தளங்களை பின்னுக்குத்தள்ளி இந்த வலைத்தளம் முன்னணியில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு இருப்பதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில் கூகுள், பேஸ்புக் தளங்கள் முறையே 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்து உள்ளன. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்