மத்தியபிரதேசத்தில் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: முதல் மந்திரி
ம.பி.யில் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்,
மத்தியபிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, "புதன்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் தகுதியான மக்களுக்கு இதுவரை 10 கோடி கொரோனா தடுப்பூசிகள்( முதல் மற்றும் இரண்டாவது டோஸ்) செலுத்தப்பட்டுள்ளன.
இதில் 94 சதவீத மக்கள் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர். அதே நேரத்தில் 87 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுள்ளனர்". இவ்வாறு முதல் மந்திரி தெரிவித்தார்.