கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில் மக்கள் மெத்தனம்: எய்ம்ஸ் இயக்குநர்
ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில் மக்கள் மெத்தனம் காட்டுவதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாமல் மெத்தனத்துடன் இருப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், தற்போதைய தரவுகளின் படி, தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதில் இருந்து தடுப்பதில் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதை காட்டுகிறது.
எனவே தகுதி வாய்ந்த அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஒமைக்ரான் மிக வேகமாக பரவக்கூடியது. எனவே, கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமானது. சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்” என்றார்.