இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் எண்ணிக்கை 138.35 கோடி

இந்தியாவில் காலை நிலவரப்படி 138.35 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

Update: 2021-12-21 07:16 GMT


புதுடெல்லி,


நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  பொதுமக்களும் ஆர்வமுடன் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை போட்டு கொள்கின்றனர்.

இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்புகளும் நாட்டில் அதிகரித்து வருகிறது.  இன்று வரை நாட்டில் 200 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை 138.35 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 64,56,911 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  இதன்படி, காலை 7 மணிவரையில், 1,38,34,78,181 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்