இமாசல பிரதேசத்திற்கு பிரதமர் மோடி வருகிற 27ந்தேதி பயணம்
இமாசல பிரதேசத்திற்கு பிரதமர் மோடி வருகிற 27ந்தேதி பயணம் செய்கிறார்.
சிம்லா,
இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் இன்று கூறும்போது, 4 ஆண்டு கால அரசாட்சியின் நிறைவையொட்டி பிரதமர் மோடி வருகிற 27ந்தேதி மாண்டி நகருக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார். நீர்மின் திட்டம் மற்றும் பன்னோக்கு திட்டம் உள்பட ரூ.11 கோடி மதிப்பிலான திட்டங்களை நாங்கள் தொடங்கி வைக்க இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.