ஒமைக்ரானை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும்: ஏய்ம்ஸ் இயக்குநர் தகவல்

இந்தியாவில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Update: 2021-12-19 18:29 GMT
புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் புதியதாக தோன்றிய கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் தற்போது இது பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில்,

"இங்கிலாந்தில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மற்ற நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரானை கருத்தில் கொண்டு இந்தியா  எந்தவொரு நிகழ்விற்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இதுவரை 150க்கும் மேற்பட் ஓமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

பாதுகாப்பாக இல்லாமல் ஒமைக்ரானிடம் மாட்டிக்கொள்வதை விட விழிப்புடன் செயல்பட்டு சூழலை எதிர்கொள்ள தயாராக இருப்பது நல்லது". இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்