வட இந்தியாவில் நிலவும் கடும் குளிர் இரு நாட்கள் நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

வட இந்தியாவில் நிலவும் கடும் குளிரால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Update: 2021-12-19 17:20 GMT
கோப்புப்படம்
டெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், 'பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள் உட்பட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக குளிர் அலை மற்றும் கடுமையான குளிர் அலை நிலவி வருகிறது. இந்த பகுதிகளில் குளிரானது டிசம்பர் 21ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் உள்ள சுருவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக -1.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் அமிர்தசரஸில் 0.7 டிகிரி செல்சியஸ் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்