இளசுகளுக்கு நம்பிக்கையூட்டும் 70 வயது தாத்தா...! சைக்கிளில் சென்று பொரி விற்கிறார்
வாழ்கையில் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் விதமாக சில நம்பிக்கையூட்டும் மனிதர்கள் இருப்பதுண்டு.
நாக்பூர்,
சமயங்களில் துவண்டுபோன வாழ்கையில் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் விதமாக சில நம்பிக்கையூட்டும் மனிதர்கள் இருப்பதுண்டு.
அப்படி ஒருவர்தான் 70 வயதான நாக்பூரை சேர்ந்த ஜெயந்தி பாய் என்ற தாத்தா. வாழ்வாதாரத்திற்காக தினமும் சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்கும் இவரது கதை தற்போது இணையவெளியில் வைரலாகி உள்ளது.
ஜெயந்தி பாய் தாத்தா உழைக்கும் நேரம் 2 மணி நேரம் மட்டுமே தானாம், மாலை 6 மணி முதல் 8 மணி வரை நாக்பூரில் உள்ள இத்வாரி மற்றும் காந்திபாக் தெருக்களில் சென்று பொறி விற்கிறார். ஏராளாமான வாடிக்கையாளர்கள் இவரது வருகைக்காக காத்துகிடப்பார்கள் என அவர் புன்னைகையுடன் கூறுகிறார்.