விலை குறைந்ததால் ஆத்திரம்... 100 கிலோ பூண்டை எரித்த விவசாயி...!
சந்தையில் தீப்பற்றிய தகவல் அறிந்ததும் சந்தை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
மத்தியபிரதேசம்,
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பூண்டு விலை குறைந்ததால் விவசாயி ஒருவர் ஆத்திரமடைந்து விவசாய விளைபொருள் சந்தையில் பூண்டை தீ வைத்து கொளுத்தி உள்ளார்.உஜ்ஜைனியில் உள்ள தியோலி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர் . இவர் தனது பூண்டுப் பயிரை விற்பதற்காக மந்த்சௌரின் உள்ள விவசாயப் பொருள் சந்தைக்கு வந்து உள்ளார்.
ஆனால் அங்கு பூண்டு மிக குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அவர் தான் கொண்டுவந்து இருந்த 100 கிலோ பூண்டை தானே தீயிட்டு கொளுத்தியுள்ளார்.சந்தையில் தீ பற்றிய தகவல் அறிந்ததும் சந்தை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். சந்தை ஊழியர்கள் கோபமடைந்த விவசாயியை சந்தை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சமானதானப்படுத்தினர்.
இது குறித்து விவசயி சங்கர் கூறும்போது " நான் இந்த 100 கிலோ பூண்டை உற்பத்தி செய்ய 2.5 லட்சம் முதலீடு செய்தேன் . ஆனால் இதற்கு வெறும் 1 லட்சம் மட்டுமே விலை கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்து பூண்டை எரித்தேன் என தெரிவித்துள்ளார்.