மராட்டிய மாநிலத்தில் இன்று 854 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் தற்போது 6,942 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2021-12-18 18:12 GMT
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று ஒரேநாளில் 854 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 66,48,694 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் அங்கு இன்று ஒரேநாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,41,340 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் 804 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 64,96,733 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தற்போது 6,942 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்