மேடையில் பளார் என விழுந்த அறை - அதிர்ச்சியில் உறைந்த மல்யுத்த வீரர் காரணம் என்ன?
விழா மேடையில் அவர் நிதானம் இழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இதில், உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி. பிரிஜ்பூஷன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் போட்டியின்போது மல்யுத்த வீரர் ஒருவரது கன்னத்தில் எம்.பி. பிரிஜ்பூஷன் திடீரென பளார் என அறை விட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மல்யுத்த வீரர் அதிர்ச்சியில் உறைந்து போனார். விழா மேடையில் அவர் நிதானம் இழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
எம்.பி. எதற்காக அடித்தார் என்ற காரணம் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த மல்யுத்த போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது.
ஆனால், கன்னத்தில் அறை வாங்கியவர் கூடுதல் வயது காரணமாக போட்டியில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் எம்.பி.யை தனக்கு தெரியும், அவர் தான் தன்னை போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னதாக விழா நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
இந்த விபரம் எம்.பி.க்கு தெரியவர, அவர் நிதானம் இழந்து அந்த நபருக்கு அறை கொடுத்துள்ளார்.