ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நிராகரித்தேன் - மத்திய மந்திரி பேச்சு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நிராகரித்தேன் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-18 05:03 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் 'நெடுஞ்சாலைகளில் முதலீடு வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது, நாம் 26 பசுமை நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளோம். 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுரங்கப்பாதைகள் அமைத்துள்ளோம். பணத்திற்கு தட்டுப்பாடு இல்லை. நாம் தங்கச்சுரங்கங்களை அமைத்து வருகிறோம். நமக்கு சுங்கச்சாவடி மூலம் வருவாய் வருகிறது. அது உயர்ந்து வருகிறது. நமக்கு பிரச்சினை இல்லை. 

மும்பையில் இன்று (நேற்று) நடைபெற்று வரும் இந்த கூட்டம் நான் 1995 ஆம் ஆண்டு மராட்டிய மந்திரியாக செயல்பட்டதை நினைவு படுத்துகிறது. அப்போது, மும்பை-புனே இடையேயான தேசிய நெடுஞ்சாலை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த ஒப்பந்தத்தை நான் நிராகரித்தேன். அப்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் திருபாய் அம்பானி இருந்தார். அவர் என் மீது மிகவும் கோவமாக இருந்தார்.

எனது முதல்-மந்திரியும், பாலசாஹிப் தாக்கரேவும் என் மீது கோவமாக இருந்தனர். ஏன் இவ்வாறு செய்தீர்கள் என அவர்கள் என்னிடம் கேட்டனர். இந்த திட்டம், அது போன்ற திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து பணத்தை திரட்டுவோம் என்று கூறினேன். அப்போது அனைவரும் என்னை பார்த்து சிரித்தனர். திட்டங்களுக்கு நமக்கு சில முதலீட்டாளர்கள் தேவை, தற்போது முதலீட்டாளர்கள் நம்மிடம் வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்