கிரிப்டோகரன்சி குறித்து ரிசர்வ் வங்கி மத்திய இயக்குனர்கள் ஆலோசனை

கிரிப்டோகரன்சி, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணயம் ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் ஆலோசனை நடத்த்தினர்.

Update: 2021-12-17 23:15 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தனியார் கிரிப்டோகரன்சி, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணயம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், அம்முடிவு கைவிடப்பட்ட நிலையில், நேற்று இந்த ஆலோசனை நடந்துள்ளது. மேலும் உள்நாட்டு, சர்வதேச பொருளாதார நிலவரம் ஆகியவை குறித்தும், கடந்த செப்டம்பர் மாதம்வரை, ரிசர்வ் வங்கியின் அரையாண்டு வருமானம் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்