கடந்த 5 ஆண்டுகளில் முப்படைகளின் 15 ஹெலிகாப்டர்கள் விபத்து - ராணுவ இணை மந்திரி தகவல்
கடந்த 5 ஆண்டுகளில் முப்படைகளின் 15 ஹெலிகாப்டர்கள் விபத்து நடந்துள்ளதாக மத்திய ராணுவ இணை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்துள்ள முப்படை ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விவரங்களை நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ராணுவ இணை மந்திரி அஜய் பட் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ‘கடந்த 2017 மார்ச் மாதம் முதல் இதுவரை முப்படைகளுக்கு சொந்தமான 15 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதில் கடந்த 8-ந் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்’ என்று கூறினார்.
இதில் ராணுவம் மற்றும் விமானப்படையில் இருந்து தலா 7 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் ஒரு ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளாகி இருப்பதாக கூறிய அஜய் பட், இந்த விபத்துகளில் 31 பேர் பலியாகி, 20 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.