2011 சாதி வாரி கணக்கெடுப்பு விவரம்; மராட்டிய அரசின் ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2021-12-15 17:13 GMT
மும்பை,

2011 ஆம் ஆண்டு நடத்திய சமூக, பொருளாதார அடிப்படையிலான சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் விவரங்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 

இதில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா, 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக, பொருளாதார அடிப்படையிலான சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை சுட்டிக்காட்டினார். மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என வாதிட்டார்.

மராட்டிய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாஃப்டே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை சரிபார்க்க சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணக்கெடுப்பின் முதல் விவரங்களை வெளியிடக் கோரி மராட்டிய அரசின் ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்