ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்...!
ஹெலிகாப்டர் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.;
பெங்களூரு,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வருண்சிங் படுகாயம் அடைந்தார்.
80% தீக்காயங்களுடன் அவருக்கு பெங்களூரு கமாண்டோ ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக உள்ளது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த தகவலை விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த அனைவரும் (14 பேரும்) உயிரிழந்த சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.