கர்நாடகத்தில் போலீசாருக்கு புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் - சட்டசபையில் போலீஸ் மந்திரி தகவல்

கர்நாடகத்தில் போலீசாருக்கு புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-14 19:28 GMT
பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் சிவலிங்கேகவுடா கேட்ட கேள்விக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 100 போலீஸ் நிலையங்கள் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும். சில பகுதிகளில் உள்ள போலீஸ் நிலைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. அதனால் புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

தற்போது செயல்பாட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பு கட்டிடங்களை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பு-2025 என்ற திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் போலீசாருக்கு புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தகுதியான போலீசாருக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

மேலும் செய்திகள்