காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

Update: 2021-12-14 19:13 GMT

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராஜபுரா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினருக்கும், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இருதரப்பினரும் ஒருவரை நோக்கி ஒருவர் என துப்பாக்கிகளால் சுட்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்