மராட்டியத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

மராட்டியத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-12-14 14:27 GMT
மும்பை,

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், மராட்டியத்தில் இன்று புதிதாக 8 பேருக்கு ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 9 பேர் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 8 பேரும் சர்வதேச பயணங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்