கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 4,073- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 35,410- ஆக குறைந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 21 ஆயிரத்து 001- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 64,350- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 580, திருவனந்தபுரம்-566, கோட்டயம் மாவட்டத்தில் 383- பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.