குரூப் கேப்டன் வருண் சிங் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: விமானப்படை அதிகாரிகள்

குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக உள்ளது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2021-12-14 13:21 GMT
பெங்களூரு,

தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் வருண்சிங் படுகாயம் அடைந்தார். 

அவரை குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த 9-ந் தேதி பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டார். இங்குள்ள கமாண்டோ ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக உள்ளது  என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.  உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்