டெல்லியில் ஒரு வாரத்தில் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு
டெல்லியில் ஒரு வாரத்தில் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் பருவமழை காலத்தில் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் 9,260 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
டெல்லியில் டெங்கு பாதிப்புக்கு முதன்முறையாக கடந்த அக்டோபர் மாதம் 18ந்தேதி ஒருவர் பலியானார். இதனை தொடர்ந்து, அரசு நிர்வாகம் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. டெல்லியில் டெங்குவுக்கு இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர் என டெல்லி அரசு தகவல் தெரிவிக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டில் இருந்து ஒப்பிடும்போது, ஓராண்டில் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கையில் இது மிக அதிகம் ஆகும்.
டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் 285 பேருக்கு டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் முறையே 4, 2 மற்றும் ஒன்று என உயிரிழப்புகள் இருந்தன.