காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: போலீசார் 2 பேர் பலி- பிரதமர் மோடி விவரங்கள் கேட்பு

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் போலீசார் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகினர்.

Update: 2021-12-13 16:00 GMT
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் போலீசார் சென்ற பேருந்தை குறிவைத்து  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீசார் இருவர் உயிரிழந்தனர். மேலும் 12-பேர் படுகாயம் அடைந்தனர். பாராளுமன்ற தாக்குதல் நடைபெற்றதன் 20 -வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பயங்கரவாதிகள் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றது. 

இந்த நிலையில், பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:  ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த விவரங்களை பிரதமர் மோடி கேட்டுள்ளார். பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்தார்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்