ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க டெல்லி தயார்: முதல் மந்திரி கெஜ்ரிவால்

ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க டெல்லி தயாராக இருப்பதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-13 11:20 GMT
புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்,  இந்தியாவிலும் பரவியுள்ளது.  இந்தியாவில் இதுவரை 38 பேர் ஒமைக்ரான்தொற்றால் பாதிப்படைந்து உள்ளனர். தற்போது கேரளாவிலும் ஒமைக்ரான் ரைவஸ் காலூன்றி உள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவலைக் தீவிரமாக கண்காணிக்க மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில்,  ஒமைக்ரான்  அச்சுறுத்தல் குறித்து டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறுகையில், ‘ ஒமைக்ரான் அச்சுறுத்தலைச் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால், தேவையான கட்டுப்பாடுகளை விதிப்போம். தற்போது, எந்த கட்டுப்பாடும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. குளிர்கால விடுமுறை முடிந்ததும் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்