உங்கள் வாழ்க்கையை வழி நடத்துபவர் நீங்கள் தான் - மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து பேச்சு
“உங்களுக்காக நீங்களே பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை வழி நடத்துபவர் நீங்கள் தான்” என மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து கூறியதாவது:-
உங்களுக்காக நீங்களே பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை வழி நடத்துபவர் நீங்கள் தான். உங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நீங்கள் தான். நான் என்னை நம்புகிறேன், அதனால்தான் இங்கே நிற்கிறேன்.
இயற்கை எப்படி அழிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது என் இதயம் உடைகிறது. அதற்கு காரணம் நமது பொறுப்பற்ற செயல்பாடுகள் தான். பேச்சை குறைத்து செயலில் தீவிரத்தை கூட்ட வேண்டிய நேரம் இது. காரணம் நமது ஒவ்வொரு நடவடிக்கையும் இயற்கையை அழிக்கலாம் அல்லது காக்கலாம் என்றார்.