2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: ராம்நாத் கோவிந்த் இரங்கல்
வீரர்களின் உன்னத தியாகத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நாடாளுமன்ற தாக்கப்பட்டதின் 20-ம் ஆண்டு தினத்தையொட்டி ஜனாதிபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற தாக்குதலில் இறந்த வீரர்களின் உன்னத தியாகத்திற்கு ஒட்டுமொத்த தேசம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தையொட்டி மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தினர்.