பெரிய வங்கிகளுடன் சிறிய வங்கிகள் இணைப்பு ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்
டெல்லி, விக்யான் பவனில் வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு தொகையை உயர்த்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற ‘வங்கி வைப்புத்தொகை காப்பீடு திட்டம்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
5 லட்சம் வரை உத்தரவாதமான வங்கி வைப்புத்தொகை காப்பீடு திட்டம் நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, வங்கி டெபாசிட் காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. அதனால் மக்கள் என்னை இங்கு அனுப்பி வைத்தார்கள்.
சிறிய வங்கிகளின் திறன், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவே பெரிய வங்கிகளுடன் இணைப்பு குறித்த காலத்தில் தீர்க்கும் போது தான் பிரச்சினையை தீவிரம் அடையால் தடுக்க முடியும் என்றார்.